Wednesday, November 10, 2010

nesam iyakkam nilai

 இனிய சொந்தங்களுக்கு வணக்கம்.
           
                   திரு அருண் மற்றும் செல்வசேகர் ஆகியோரது கருத்துக்கள் மிகவும் ஆக்கபூர்வ மானது.
நேசம் இதை செயல்படுத்தவும் மிக ஆவலாக உள்ளது.ஆனால் எப்படி என்றுதான் யோசிக்க 
வேண்டியுள்ளது. நேசம் இப்பொழுது மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது.கடந்த ஜனவரி யில் நேசத்திற்காக  அலுவலகம் ஒன்று எடுக்கப்பட்டது. திரு முருகவேல் அவர்கள் தன் சொந்த பணத்திலேயே இதற்கு முன்பணம் மற்றும் கடந்த பத்து மாதமாக வாடகையும் கொடுத்து  வந்தார். ஒரு நான்கைந்து முறை மட்டுமே அந்த அலுவலகத்தை பயன்படுத்தியுள்ளோம்.அவரின் வருத்தமெல்லாம் யாரும் பணம் 
பணம் கொடுக்கா விட்டாலும் அதை  நன்கு பயன்படுத்தி இருக்கலாம் என்பதே .இங்கே  நேசம் இயக்க நிர்வாகிகள் அனைவரும் மிக பிசியான பணியில் இருப்பவர்கள்.இருந்தாலும் முடிந்த வரை பணிகளை செய்ய முயல்கிறோம் . ஆனாலும் முழுமையை செய்ய முடிவதில்லை.  நேசம் உறுபினர்கள் பல பேர் சென்னையில் இருந்தாலும் எந்த இயக்க கூட்டங்களுக்கும்  வருவதில்லை.
குறைந்தது     ஒரு வருடத்தில் ஒரு பத்து மணி நேரம் அனைத்து உறுபினர்களும் நேசத்திற்காக பயன்படிதினால் மிக சிறப்பான வளர்ச்சியை காணலாம்.ஒரு 5 அல்லது 6 பேர் மட்டுமே நேரடி தொடர்பில் இருக்கிறோம். அதே போல் நேசம் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளது.இது வரை ஒரு சிலரின் உதவியினாலும் மற்றும் முருகவேளின் உதவியினாலும் எம்மால் நேசத்தை நடத்த முடிந்துள்ளது .நேசத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டும் என்றால் அதற்கு நிறைய நிதியும்  உறுபினர்களின் நேரடி பங்களிப்பும் நிச்சயம் தேவை .

அதற்கு முதல் படியாக இந்த வருடம் நேசம் இயக்க ஆண்டு விழாவை மிக சிறப்பாக நடத்துவோம்.

அதே போல் நேசத்திற்கு இந்த வருடம் மிக சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களை நாம் கௌரவிக்க வேண்டும்.

சென்னையிலோ அல்லது அனைத்து உறுப்பினர்களின் வசதிக்கேற்ப வேறு ஊரிலோ நமது இயக்க விழாவை கொண்டாடுவோம்.

இது குறித்து உங்கள் கருத்துகளை எதிர் பார்க்கிறோம் .

உங்கள் பங்களிப்புகளுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும்.

நன்றி
விஜயசங்கர்

தொடர்புகளுக்கு

G முருகவேல்  - 9840467604
R .விஜயசங்கர் - 9841945285

























 

No comments:

Post a Comment